தமிழகத்தில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் : நல்லக்கண்ணு

101

தமிழகத்தில் மணல் கொள்ளையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு வலியுறுத்தியுள்ளார்.
திருச்சி கல்லணை காவிரி ஆற்றில் உள்ள மணல் குவாரியை அவர் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நல்லக்கண்ணு, கர்நாடக அரசு தண்ணீர் கொடுத்தாலும் அது பயன்தராத வகையில், காவிரி ஆற்றில் அதிகளவில் மணல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மணல் கொள்ளை காரணமாக காவிரியில் இருந்து வரும் நீர் கடைமடைக்கு போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், மணல் கொள்ளையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.