மேற்கு வங்க சாரதா நிதிநிறுவன மோசடி வழக்கில், அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராகாத நளினி சிதம்பரத்திற்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

148

மேற்கு வங்க சாரதா நிதிநிறுவன மோசடி வழக்கில், அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராகாத நளினி சிதம்பரத்திற்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மேற்கு வங்க சாரதா நிதிநிறுவன சீட்டு மோசடி தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. மோசடியில் முன்னாள் மத்திய அமைச்சரின் மனைவி நளினி சிதம்பரத்திற்கு தொடர்பு உள்ளதாக விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து, அமலாக்கத்துறை சார்பில், கடந்த மாதம் நேரில் ஆஜராக நளினி சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. மேலும், பெண்ணாக இருப்பதால், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேரில் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்திக்கொள்ளலாம் என்றும் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து சட்ட ஆலோசனை நடத்திய அமலாக்கத்துறை, நளினியின் விளக்கத்தை ஏற்க மறுத்து, பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், அவசியம் நேரில் நளினி சிதம்பரம் ஆஜராக வேண்டும் என முடிவு செய்துள்ளது. இதனையடுத்து, சீட்டு மோசடி வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என நளினி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சார்பில் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.