பாஜக-வின் ஜிஎஸ்டி திட்டம் தோல்வியடைந்து விட்டது – நக்மா

203

பாஜக கொண்டு வந்த ஜிஎஸ்டி திட்டம் தோல்வியடைந்துவிட்டதாக நக்மா குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கும் விதமாக சக்தி என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் நமசிவாயம், அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா ஆகியோர் கலந்துகொண்டு சக்தி செயலியை அறிமுகம் செய்து வைத்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நக்மா, பண மதிப்பிழப்பு காரணமாக அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.