மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் நஜிப் ரசாக் அறிவித்துள்ளார்.

1794

மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் நஜிப் ரசாக் அறிவித்துள்ளார்.
மலேசிய பிரதமராக பதவி வகித்து வரும் நஜிப் ரசாக்கின் பதவிக் காலம் இம்மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில் விரைவில் அங்கு தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தலை முன்னிட்டு நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக பிரதமர் நஜிப் ரசாக் அறிவித்துள்ளார். இந்நிலையில் தன் மீதான ஊழல் வழக்கில் இருந்து தப்பிக்க, நாடாளுமன்றத்தை ரசாக் கலைத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.