நடிகர் சங்க பொதுக்குழுவில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 42 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

0
130

நடிகர் சங்க பொதுக்குழுவில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 42 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் திடீரென இருதரப்பினர் இடையே மோதல் வெடித்தது. இதனை தொடர்ந்து நடிகர் சங்க துணைத்தலைவர் கருணாஸின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. மேலும் பொதுச்செயலாளர் விஷால் அலுவலகம் மீதும் இரவில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த மோதல் சம்பவம் தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் 42 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே, நடிகர் சங்கத்தின் அறகட்டளையிலிருந்து அச்சங்கத்தின் பொருளாளர் கார்த்தி, தனது சொந்த பட நிறுவனத்திற்காக 10 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார் என, நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட ராதாரவி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இந்த பணத்தை தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு அவர் வழங்கியுள்ளதாக கூறியுள்ள ராதாரவி, நடிகர் சங்க அறக்கட்டளை சட்டப்படி இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY