பாஜக ஆட்சியில் நாட்டுக்கு என்ன நன்மைகள் ஏற்பட்டன விவாதிக்க மோடி தயாரா – நாயுடு அழைப்பு…!

107

மத்திய பாஜக ஆட்சியில் நாட்டுக்கு என்ன நன்மைகள் ஏற்பட்டன என்பது குறித்து தம்முடன் விவாதிக்க மோடி தயாரா என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சவால் விடுத்துள்ளார்

இதுகுறித்து ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருந்ததாக தெரிவித்தார். தற்போதைய நிலை சரியாக இல்லை என்று விமர்சித்தசந்திரபாபு நாயுடு, ஜி எஸ் டி, பணமதிப்பு இழப்பு, ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்கு எந்த வகையில் பயனாக இருந்தன என்றும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிஅடைந்திருப்பதற்கு மோடிதான் காரணம் என்றும் குற்றஞ்சாட்டினார்.

பொருளாதார வளர்ச்சிக் குறித்தும், பாஜக ஆட்சியில் நாட்டுக்குஎன்ன நன்மைகள் ஏற்பட்டன என்பது குறித்தும் தன்னுடன் விவாதம் நடத்தமோடி தயாரா என்றும் சந்திரபாபு நாயுடு சவால் விடுத்தார்.