நாகர்கோவிலில் காதலியுடன் எடுத்த ஆபாச வீடியோவை இணையத்தில் வெளியிட்ட இளைஞர் கைது…!

716

நாகர்கோவிலில் காதலியுடன் எடுத்த ஆபாச வீடியோவை இணையத்தில் வெளியிட்ட இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவிலை சேர்ந்த ஷாம் முத்துகுமார், கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எடுக்கப்பட்ட ஆபாச வீடியோவை முத்துகுமார் இணையத்தில் பதிவேற்றியுள்ளார். இதனை பார்த்த சம்மந்தப்பட்ட மாணவியின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்துள்ளார். இதனிடையே புகார் குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், ஷாம் முத்துகுமாரை கைது செய்து இதுபோல் வேறு யாரையும் ஏமாற்றியுள்ளாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.