நாகர்கோவில் அருகே மலைப் பகுதியில் ரத்த காயங்களுடன் 12ம் வகுப்பு மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

251

நாகர்கோவில் அருகே மலைப் பகுதியில் ரத்த காயங்களுடன் 12ம் வகுப்பு மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள மருந்துகோட்டையை சேர்ந்த குமாரதாஸ் என்பவரின் மகள் ஜெனிஃபர். இவர், அரசு மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு படித்துவருகிறார். இந்நிலையில் கடந்த 9ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஜெனிபர், அங்குள்ள மலைப் பகுதியில் ரத்தகாயஙகளுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையம் விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்