நாகர்கோவில் அருகே உள்ள தண்டவாளத்தில் கூலி தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

327

நாகர்கோவில் அருகே உள்ள தண்டவாளத்தில் கூலி தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள வடசேரி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், ஒழுகினசேரி தண்டவாளத்தில் உடல் சிதறிய நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ராமகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ராமகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டரா அல்லது கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்டரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.