நாகர்கோவில் அருகே கணவன்-மனைவியை தாக்கிவிட்டு கொள்ளையடித்து சென்ற வழக்கில், 3 பேருக்கு 15வருடம் கடுங்காவல் தண்டனை விதித்து, மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

236

நாகர்கோவில் அருகே கணவன்-மனைவியை தாக்கிவிட்டு கொள்ளையடித்து சென்ற வழக்கில், 3 பேருக்கு 15வருடம் கடுங்காவல் தண்டனை விதித்து, மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நாகர்கோவில் அருகே உள்ள இரணியல் தலகுளம் பகுதியை சேர்ந்தவர், தாணுபிள்ளை. இவர் இரவில் தூங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டினுள் நுழைந்த மர்மநபர்கள், நகைகளை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர். அத்துடன், தாணுபிள்ளை, அவரது மனைவி மற்றும் மகளையும் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர். இதுதொடர்பான வழக்கில், அதே பகுதியை சேர்ந்த சாஸ்தா பிள்ளை, ஐயப்பன், மகேஷ் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், கடந்த 2007-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சாஸ்தா பிள்ளை, ஐயப்பன், மகேஷ் ஆகியோருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், மற்ற இருவருக்கும் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, தீர்ப்பு வழங்கினார்.