நாகலாந்து ரசாயனம் தடவிய மீன்கள் பறிமுதல் - அதிகாரிகள் ஆய்வு

நாகலாந்தில் மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க ரசாயனம் பயன்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மீன்கள் விரைவில் கெட்டுப்போகாமல் இருக்க பென்ஸோயேட் மற்றும் அம்மோனியா ஆகிய ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ரசாயன பொருட்களால் புற்றுநோயை உண்டாகும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாகலாந்தில் உள்ள கோஹிமா மீன்கடைகளில் ரசாயன பொருட்கள் கலந்த மீன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து ஆயிரத்து 666 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இறக்குமதி செய்யப்படும் மீன்களையும் இந்த ஆய்வுக்கு உட்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.