நாகப்பட்டினம் வருவாய் துறை சார்பில் 4 பேருக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.

227

நாகப்பட்டினம் வருவாய் துறை சார்பில் 4 பேருக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் 3 நபருக்கு கருணை அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் பணியும் ஒருவருக்கு அலுவலக உதவியாளர் பணியும் வழங்கப்பட்டது. இதன பணி நியமனத்தை கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோபால் மற்றம் சட்டமன்ற உறுப்பினர்கள் பவுன்ராஜ், பாரதி, ராதாகிருஷ்ணன், தமிமுன் அன்சாரி உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.