குறுவை சாகுபடிக்கு 10 மணி நேரம் மின்சாரம் தரவேண்டும் – திருமாவளவன்

247

குறுவை சாகுபடி செய்வற்கு குறைந்தது 10 மணி நேரம் மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் வலிறுத்தியுள்ளார்.

மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜிஎஸ்டி வரியால், இந்திய பொருளாதாரம் அகல பாதாளத்திற்கு சென்றுள்ளது என்றார். மத்திய அரசின் தவறான கொள்கையினால் தொழில்கள் முடங்கியதுடன், வணிகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று திருமாவளவன் தெரிவித்தார். காவிரியில் உரிய நீரை பெற பிரதமரை நேரில் சந்தித்து, முதலமைச்சர் பழனிசாமி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறிய அவர், குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீர் பெற மின் மோட்டார்களுக்கு குறைந்தது 10 மணி நேரம் மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.