பிறை தென்பட்டதால் நாகை மற்றும் திருச்செந்தூரில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்..!

407

பிறை தென்பட்டதால் நாகை மற்றும் திருச்செந்தூரில் ரம்ஜான் பண்டிகை பரவலாக கொண்டாடப்பட்டது.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, நாகை மாவட்டம், நாகூர் சில்லடி கடற்கரையில் ஜாக் அமைப்பு சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் மாநில செயலாளர் அன்சாரி கலந்து கொண்டு துவா ஓதினார். இதில், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். இதேபோல, திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினம் கடற்கரையில், ரம்ஜானை முன்னிட்டு, இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் மற்றும் ஜிம்மா பள்ளிவாசல் சார்பில், சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டு, தொழுகையில் ஈடுபட்டனர். மேலும், ஒருவரை ஒருவர் கட்டி தழுவி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.