சீர்காழி அருகே உயிரிழந்த விவசாயின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

251

நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த அழகியநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி நடராஜன். இவர் சில தினங்களுக்கு முன்பு சம்பா சாகுபடிக்கு தண்ணீர் இல்லாமல் கருகிப் போன பயிர்களை கண்ட அதிர்ச்சியில் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப்பேசிய அவர், உயிரிழந்த விவசாயி நடராஜன் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், விவசாயிகள் தொடர் தற்கொலை மற்றும் உயிரிழப்பை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.