நாகையில் பழமை வாய்ந்த செய்யது பாவா பஹ்ருதீன் ஒலியுள்ள தர்காவின் கந்தூரி திருவிழாவில் சந்தனகூடு ஊர்வலம் வெகு விமர்ச்சியாக நடைபெற்றது

206

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கைநல்லூரில் பழமை வாய்ந்த செய்யது பாவா பஹ்ருதீன் ஒலியுள்ள தர்கா அமைந்துள்ளது. இங்கு கந்தூரி விழா கடந்த 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனகூடு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதில் இஸ்லாமியர்கள் திரளாக கலந்து கொண்டனர். கந்தூரி விழாவை ஒட்டி நடத்தப்பட்ட வாணவேடிக்கைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.