நாகையில் கடல் சீற்றம் காரணமாக, மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

1004

நாகையில் கடல் சீற்றம் காரணமாக, இரண்டாவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக வழக்கத்தைவிட கடல் சீற்றமாக உள்ளதால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் கடலோரத்தில் கடந்த 2 நாட்களாக, அதிகாலை முதல் தெற்கு திசையில் இருந்து வழக்கத்தை விட வேகமான காற்று வீசி வருகிறது. கடலின் சீற்றம் அதிகமாகக் காணப்படுவதால் கடற்கரையை ஒட்டிய குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும் கடல் நீர் புகுந்துள்ளது. இதனால் அங்கு வாழும் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்தநிலையில், வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம் உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் 2-வது நாளாக இன்றும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 700 பைபர் படகுகள் மற்றும் 150 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, 3000-க்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.