விவசாயிகள் நெல்லை சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டம்..!

80

நாகை மாவட்டம் திருமருகல் அருகே நெல்கொள்முதல் நிலையங்களைத் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தற்போது அறுவடை ப் பணிகள் முடிவடைந்துள்ளன. அதனால், அரசு இந்தப்பகுதியில் நெல் கொள்முதல்நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்காமல் காலம் கடத்திவருவதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், திருமருகல் மற்றும் அதைச்சுற்றியிருக்கும் பகுதிகளில் இருக்கும் விவசாயிகள் கும்பகோணம்- நாகை சாலையில் நெல்லை கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்குவந்த போலீசார் முன்னிலையில் விவசாயிகள்தங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.