நாகை மாவட்டத்தில் கனமழையால் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ள நீர் !

402

நாகை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் விளைநிலங்கள் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
நாகை மாவட்டத்தில் தொடர்ந்து 8வது நாளாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழையால் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. கிராமத்தின் பல்வேறு பகுதிகள் குட்டித் தீவாக மாறியுள்ளன.
அத்துடன் விளைநிலங்கள் முழுவதும் மழைநீரால் மூழ்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சம்பா சாகுபடி செய்த விவசாயிகளின் நிலைமை கேள்விக்குறியாக உள்ளது. தொடர் மழையால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். ice_screenshot_20171107-093020