இந்திய கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு..!

153

கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களை சிங்கள கடற்படையினர் தாக்கி விரட்டியடித்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறையிலிருந்து நான்கு மீனவர்கள் நேற்றிரவு மீன்பிடிக்கச் சென்றனர். கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் படகு மீது மோதினர். மேலும் அவர்கள் படகுகளில் வைத்திருந்த மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி அட்டூழியத்தில் ஈடுபட்டனர். செல்போன், ஜி.பி.எஸ். கருவி, டார்ச்லைட் உள்ளிட்ட பொருட்களையும் அவர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதனையடுத்து மீன்கள் ஏதும் பிடிக்காமல் தமிழக மீனவர்கள் கரை திரும்பினர்.