நாகைப்பட்டினம் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

216

நாகை மாவட்டம் புல்வெலி கிராமத்தைச் சேர்ந்த சரவணமூர்த்தி என்பவர்., கடந்த 19 ஆம் போது இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதனையடுத்து சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் சரவணமூர்த்தி மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனவே சரவணமூர்த்தியின் உடலை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்தனர். இதன்படி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவரது ஒரு சீறுநீரகம் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு பொருத்தப்பட்டது.