நாகை அருகே பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேளாங்கண்ணி அடுத்த தெற்கு பொய்கை நல்லூர் பகுதியில் செல்வராமன் என்பவர் வசித்து வருகிறார். பிரபல ரவுடியான இவரை நேற்றிரவு கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் உடன் வந்த மர்ம நபர்கள் சிலர் சரமாரியாக வெட்டினர். இதில், படுகாயமடைந்த செல்வராமன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.