இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 51 பேர் காரைக்கால் துறைமுகம் வந்தடைந்துள்ளனர்.

107

ரமேஷ்வரம், புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் இருந்து பல்வேறு தேதிகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 51 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். இதனையடுத்து, இலங்கை தலைநகர் கொழும்பில் கடந்த 2ம் தேதி நடைபெற்ற இந்தியா, இலங்கை இடையேயான பேச்சு வார்த்தையின் போது தமிழக மீனவர்களை விடுவிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 51 தமிழக மீனவர்களை ஊர்க்காவல் மற்றும் மன்னார் நீதிமன்றங்கள் விடுதலை செய்து உத்தரவிட்டது. விடுவிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் கப்பல் மூலமாக இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் நேற்று காரைக்கால் துறைமுகம் வந்தடைந்தனர்.