கனமழையால் 2,500 வாழை மரங்கள் சாய்ந்து சேதம்:அரசு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

105

மயிலாடுதுறை அரகே மழையால் தேசமடைந்த 2ஆயிரத்து 500 வாழை மரங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர் .

நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பலத்த சூறைக்காற்றுடன், கன மழை பெய்தது. இதில், மயிலாடுதுறை அருகே உள்ள செம்பனார்கோயில் பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த 2ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து முற்றிலுமாக, சேதமடைந்தன. இதனால் சுமார் 7 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயி வேதனை தெரிவித்துள்ளார். மேலும், வாழை மரங்களுக்கு இன்சூரன்ஸ் கிடையாது என வங்கி நிர்வாகம் மறுத்து விட்டதால், இன்சூரன்ஸ் தொகை கிடைக்கவும் வாய்ப்பு இல்லை என கண்ணீருடன் கூறும் விவசாயி உரிய நிவாரணம் வழங்கி அரசு உதவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.