நாக சைதன்யா-சமந்தா திருமணம் : கோவாவில் இன்று நடக்கிறது.

439

தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தா திருமணம், கோவாவில் இன்று நடைபெறுகிறது.

தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தா, யே மாயா செஸாவே Ye Maaya Chesave திரைப்படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்ததையடுத்து, கோவாவில் திருமண ஏற்பாடுகள் மும்முரம் அடைந்துள்ளன. திருமண ஏற்பாடுகளுக்காக 10 கோடி ரூபாய் செலவிடப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று இந்து மத முறைப்படியும், நாளை கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் நடைபெற உள்ளது.
இதில் இருவரது உறவினர்களும், நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரை உலக பிரபலங்கள் மட்டுமே கலந்து கொள்ளவுள்ளனர். பின்னர் ஐதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாகவும், இதில் ரசிகர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என்றும் நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜூனா கூறியுள்ளார்.