நடிகர் கமல்ஹாசனின் கருத்துக்கு சீமான் பதில் எதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்? என கேள்வி!

306

தமிழகத்தில் நடைபெறும் ஊழல்களுக்கு எதிராக குரல் கொடுக்க தயார் என்று நடிகர் கமல்ஹாசனின் கருத்துக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்துள்ளார்.
சென்னை அடுத்த தாம்பரத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். சிவாஜி கணேசனின் சிலை அகற்றப்பட்டது தமிழ் இனத்திற்கு ஏற்பட்ட அவமானம் என கூறிய அவர், நடிகர் கமல்ஹாசன் தன்னை சுற்றி நடப்பதை கவனிக்கிறாரா? என்பது தெரியவில்லை என விமர்சித்தார். எதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பதை நடிகர் கமல்ஹாசன் தெரிவிக்க வேண்டும் என கூறிய சீமான், ஊழல்களுக்கு எதிராக எப்போதும் குரல் கொடுக்க தான் தயார் என்றும் திட்டவட்டமாக கூறினார்.