சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழுக்கூட்டத்தில் இருதரப்பினர் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

214

சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழுக்கூட்டத்தில் இருதரப்பினர் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்னிந்திய நடிகர் சங்க 63வது பொதுக்குழு கூட்டம் தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
நடிகர் சங்கத்தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள், கருணாஸ், பொன்வண்ணன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மதியம் இரண்டு மணிக்கு தொடங்கிய இந்த பொதுக்குழுவில் தங்களையும் பங்கேற்க அனுமதிக்கவேண்டும் என நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால், அவர்களை உள்ளே விடுவதற்கு நடிகர் சங்க நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டடத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறி இருதரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரி அடித்துக்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இருதரப்பினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் ஐந்து பேர் மயக்கமடைந்தனர். இதையடுத்து, கைகலப்பில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். பின்னர், அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.