அறக்கட்டளை விதிகளை மீறியதால் நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார், ராதாரவி ஆகியோர் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார்.

225

அறக்கட்டளை விதிகளை மீறியதால் நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார், ராதாரவி ஆகியோர் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்துக்கு பிறகு அதன் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பேசிய அவர்கள், நடிகர் சங்கக்கணக்கில் எட்டரை கோடி ரூபாய் இருப்பு உள்ளதாக
தெரிவித்தனர். மூன்று ஆண்டுகளுக்குள் நடிகர் சங்கத்துக்கு கட்டடம் கட்டப்படும் என்று கூறிய அவர்கள், நடிகர் சங்கத்தின் சொத்துக்களை மீட்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். நடிகர் சங்கத்தில் தவறுகள் நடைபெறுவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறிய நிர்வாகிகள், பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்கு அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டதாக தெரிவித்தனர். அறக்கட்டளை விதிகளை மீறியதால்
தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார், ராதாரவி ஆகியோர் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக நடிகர் சங்க நிர்வாகிகள் கூறினர்.