முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி, நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக் உள்ளிட்டோர் நேரில் விசாரித்தனர்.

199

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி, நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக் உள்ளிட்டோர் நேரில் விசாரித்தனர்.
உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராமசாமி, புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி, தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் கார்த்திக், ஆகியோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று முதலமைச்சரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.