சசிகலா கணவர் நடராஜன் கவலைக்கிடம் | மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்..!

1330

உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சசிகலாவின் கணவர் நடராஜன் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார். கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் உள்ள அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடராஜனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக லண்டனை சேர்ந்த பிரபல கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் முகம்மது ரீலா என்பவர் சென்னை வந்துள்ளார். ஒரிரு நாளில் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனிடையே, நடராஜனின் சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நுரையீரல் அடைப்பும் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜனுக்கு நேற்று 8 மணி நேரத்திற்கும் மேலாக அவருக்கு டயாலிசிஸ் நடந்ததாக கூறப்படுகிறது.