நடராஜன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் .. மருத்துவமனை நிர்வாகம் தகவல் ..!

329

புதியபார்வை ஆசிரியர் நடராஜன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக குளோபல் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவரும், புதியபார்வை ஆசிரியருமான நடராஜன், கடந்த அக்டோபர் மாதம் கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதனால் கடந்த 5 மாதங்களாக ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், அவருக்கு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 16ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக குளோபல் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நெஞ்சுவலி காரணமாக நடராஜன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், தொடர்ந்து மருத்துவர்களின்
கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் செயற்கை சுவாச கருவி உதவியுடன் நடராஜனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா, கணவர் நடராஜனை காண பரோலில் வர உள்ளதாகவும், இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரியிடம் விண்ணப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நடராஜனுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால், டிடிவி. தினகரனின் திருச்சி மற்றும் புதுக்கோட்டை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.