நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் முடக்கப்படுவதற்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

264

நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் முடக்கப்படுவதற்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரூபாய் நோட்டு விவகாரத்தை எழுப்பி நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கடந்த மூன்று வாரங்களாக அவை நிகழ்ச்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் முடக்கப்படுவதற்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேறாமல் இருப்பதாக கூறிய பிரணாப் முகர்ஜி, நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் உறுப்பினர்கள் கூச்சலிடுவது ஏற்புடையது அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது என்றும் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.