உலகிலேயே அதிக வயதான மூதாட்டி உடல்நல குறைவால் மரணமடைந்தார்.

4013

உலகிலேயே அதிக வயதான மூதாட்டி உடல்நல குறைவால் மரணமடைந்தார்.
ஜப்பான் நாட்டின் ககோஷிமா மாகாணத்தில் உள்ள கிகாய் நகரை சேர்ந்தவர் நபி தஜிமா. 1900ஆம் ஆண்டு பிறந்தவரான இவர் உலகிலேயே அதிக வயதான மூதாட்டி என்ற பெருமையை பெற்று இருந்தார். 160 பேரக் குழந்தைகளுடன் வாழ்ந்துவந்த தஜிமா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.இவரது மறைவை தொடர்ந்து மற்றொரு ஜப்பானிய பெண்ணான சியோ மியாகோ உலகின் மிக வயது முதிர்ந்த பெண் என்ற இடத்தினை பிடித்துள்ளார்.