நாட்டில் மின்னணு பரிவர்த்தனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

202

நாட்டில் மின்னணு பரிவர்த்தனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மான் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
ஒரே ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனை படைத்துள்ளதாக புகழாரம் சூட்டினார்.
இந்தியாவின் சாதனையை உலக நாடுகள் பாராட்டுவதாக கூறிய அவர், விஞ்ஞானிகளின் சாதனை விவசாயிகளுக்கு மிகவும் பயனளிக்கும் என்று குறிப்பிட்டார்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் நவீன ஏவுகணையை இந்தியா சோதனை செய்துள்ளதாக கூறிய அவர், நாட்டுக்கு அதிக அளவில் விஞ்ஞானிகள் தேவை என்றும் அவர் தெரிவித்தார்.
நமது சமூகம் தொழில்நுட்பத்தை நோக்கி திரும்பியுள்ளதாக கூறிய பிரதமர், டிஜிட்டல் வர்த்தகம் மேலும் வளர வேண்டும் என தெரிவித்தார்.
நாட்டின் முதுகெலும்பான விவசாயம், பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பதை குறிப்பிட்ட மோடி, நாட்டு மக்கள் அனைவரும் மின்னணு பரிவர்த்தனையை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.