அதிமுகவில் தொடர்ந்து பணியாற்றுவேன் என நாஞ்சில் சம்பத் உறுதி அளித்துள்ளார்.

238

அதிமுகவில் தொடர்ந்து பணியாற்றுவேன் என நாஞ்சில் சம்பத் உறுதி அளித்துள்ளார்.
பொதுவாழ்வில் இருந்து விலகுவதாக கடந்த வாரம் ஜெயலலிதா தனக்கு வழங்கிய இன்னோவா காரை நாஞ்சில் சம்பத் திருப்பி வழங்கினார். இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை, போயஸ் கார்டன் இல்லத்தில் நாஞ்சில் சம்பத் இன்று சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் அதிமுகவிடம் ஒப்படைத்த கார் திரும்பவும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொடர்ந்து தொய்வின்றி அதிமுகவிற்காக பணியாற்ற உள்ளதாக தெரிவித்தார். சசிகலாவின் ஆணையை ஏற்று தமிழகம் முழுவதும் அதிமுகவிற்கு தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்வேன் என்றும் அவர் உறுதி அளித்தார்.