நாகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த திடீர் கனமழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

237

நாகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த திடீர் கனமழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், நாகப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. நாகை, வேளாங்கண்ணி, கீழ்வேளுர், திருப்பூண்டி, திருமகள் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையினால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக, வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.