மீனவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் நாகையில் தொடங்கப்பட்ட மீன்வளப் பொறியியல் கல்லூரியில், புதிய பட்டயப் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

263

மீனவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் நாகையில் தொடங்கப்பட்ட மீன்வளப் பொறியியல் கல்லூரியில், புதிய பட்டயப் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

நாட்டின் பொருளாதாரத்திலும், ஏற்றுமதி மூலம் அன்னிய செலவாணியை ஈட்டித் தருவதிலும், மீன்பிடித் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை நவீன மயமாக்கவும், தொழில் நுட்பத்தில் உயர்த்தவும், நாகப்பட்டினத்தில், மீன்வள பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. தமிழக அரசால் தொடங்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தின் துணை கல்லூரியாக நாகையில் மீன்வளப் பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே முதல் முறையாக தொடங்கப்பட்ட இக் கல்லூரியில், கடல் வளம், மீன் வள அறிவியல் குறித்து இரண்டு ஆண்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இக்கல்லூரியில் தற்போது, அலங்கார மீன்வளர்ப்பு குறித்த பட்டயப் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
இப்பிரிவில் சேருவதற்கு மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.