நாடு முழுவதும் ஏடிஎம் மையங்கள் தொடர்ந்து மூடிகிடப்பதால் ஏடிஎம் நிறுவனங்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

235

நாடு முழுவதும் ஏடிஎம் மையங்கள் தொடர்ந்து மூடிகிடப்பதால் ஏடிஎம் நிறுவனங்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதையடுத்து, ஏடிஎம்களில் பணம் எடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் ஏடிஎம் மையங்களில் நிரப்ப தேவையான பணம் இல்லாததால் நாடு முழுவதும் 90 சதவீத ஏடிஎம் மையங்கள் கடந்த ஒன்றரை மாதங்களாக மூடிக்கிடக்கின்றன. இதனால் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஏடிஎம் நிறுவனங்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தை மத்திய அரசு தரவேண்டும் என ஏடிஎம் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஏடிஎம் நிறுவனங்கள் ஒவ்வொரு முறையும் பணம் நிரப்பும்போது அதற்கு உரிய கட்டணத்தை சம்மந்தப்பட்ட வங்கிகளிடம் வசூலித்து விடுகிறார்கள். ஆனால், கடந்த ஒன்றரை மாதத்துக்கும் மேலாக ஏடிஎம்கள் முடங்கிகிடப்பதால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, மத்திய அரசு உரிய இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்கவேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.