நாடு முழுவதும் உள்ள பத்து வங்கிகளின் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிளைகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

348

நாடு முழுவதும் உள்ள பத்து வங்கிகளின் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிளைகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து, வங்கிக்கணக்குகளில் பலரும் அதிக அளவிலான பணத்தை டெபாசிட் செய்து, கருப்புப்பணத்தை மாற்ற முயற்சித்து வருவது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, பணமோசடி தடுப்புச்சட்டத்தின்கீழ் சோதனைகள் நடத்த வேண்டும் என மத்திய அவசர கால நிர்வாக அமைப்பான பெரா அறிவுறுத்தியதைத்தொடர்ந்து, அமலாக்கத்துறை வங்கிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகிறது. பத்துக்கும் மேற்பட்ட வங்கிகளின் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிளைகளில் உள்ள வங்கிக்கணக்குகளில், ஒரே சமயத்தில், டெபாசிட் செய்யப்பட்ட, அதிக அளவிலான மதிப்பிலான, பணம் குறித்து இந்த சோதனை நடைபெற்று வருவதாக அமலாக்கத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சோதனை நடைமுறைகள், வங்கிகளின் செயல்பாடுகளுக்கு இடையூறு அளிக்காத வகையிலும், வாடிக்கையாளர்களை பாதிக்காத வகையிலும் நடைபெற வேண்டுமென அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு அதன் தலைவர் கர்னெய்ல் சிங் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, நாடு முழுவதும் வங்கிக்கணக்குகளில் அதிக அளவிலான டெபாசிட்கள் குறித்த அமலாக்கத்துறையின் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.