மயிலாடுதுறை நகராட்சிக் குப்பைக்கிடங்கில் பயங்கர தீவிபத்து

124

மயிலாடுதுறை குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீயை இரவு முழுவதும் தீயணைப்புத்துறையினர் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஆண்தாண்டவபுரம் பகுதியில் உள்ள குப்பைக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்படும். இந்த நிலையில், நேற்று மாலை ஆண்தாண்டவபுரம் குப்பைக்கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காற்றின் வேகம் காரணமாக, குப்பைக்கிடங்கில் பற்றிய தீ தொடர்ந்து எரிந்து வருவதையடுத்து, இரவு முழுவதும் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீயால் ஏற்பட்ட புகையால், அருகில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.