பன்னீர் செல்வத்தின் பிரச்சார வாகனம் முற்றுகை | ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

277

சென்னை ஆர்.கே.நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பன்னீர் செல்வத்தின் வாகனத்தை தினகரன் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ஆர்.கே.நகரிலுள்ள எழில்நகர் பகுதியில் ஓ.பன்னீர் செல்வம் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். ஆர்.கே.நகர் காவல்நிலையம் வழியாக வந்து கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்கள், பன்னீர் செல்வத்தின் பிரச்சார வாகனத்தை முற்றுகையிட்டனர். இதனால், இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினரின் சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.