முத்துராமலிங்க தேவரின் 55-வது ஜெயந்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது!

779

தேவர் ஜெயந்தி விழாவையொட்டி பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் பொதுமக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
முத்துராமலிங்க தேவரின் 55-வது ஜெயந்தி விழா கடந்த மூன்று நாட்களாக கொண்டாடப்பட்டு வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஜெயந்தி விழாவின் கடைசி நாளான இன்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று மரியாதை செலுத்தி வருகின்றனர். இதனையொட்டி, யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த நீர், பஞ்சாமிர்தம் மற்றும் பால் உள்ளிட்டைவைகளை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.