முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் – முத்தரசன்

245

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு புகாரில், முதலமைச்சர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். முதலமைச்சர் பதவியில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியை லஞ்ச ஒழிப்புத்துறை எப்படி விசாரிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பிய முத்தரசன், முதலமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி விலகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். .