முன்னாள் அதிபர் முஷாரப் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு..!

493

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பின் தேசிய அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை முடக்குமாறு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானில் 2007 ஆம் ஆண்டு அவசர நிலை பிறப்பித்ததற்காக முஷாரப் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கிற்கான விசாரணைக்கு முஷாரப் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவரின் தேசிய அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் ஆகியற்றை முடக்குமாறு உள்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்தது. அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் முடக்கப்பட்டால், அவரது வங்கி கணக்குகளும் முடக்கப்படும். இதனால், வெளிநாடுகளுக்கு முஷரப் பயணம் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.