பாலியல் தொல்லைக்கு ஆளான பெண் எஸ்.பி : சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

142

உரிய விதிமுறைகள் பின்பற்றாத விசாக கமிட்டியை மாற்றியமைக்க வேண்டும் என்று பாலியல் தொல்லைக்கு ஆளான பெண் எஸ்.பி. சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குனரும், ஐ.ஜி.யுமான முருகன், தமக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அதே துறையில் காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்த பெண் போலீஸ் அதிகாரி, டிஜிபி மற்றும் முதலமைச்சர் தனிப் பிரிவில் புகார் கொடுத்திருந்தார். இதனால், அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், ஐ.ஜி. முருகன் அதே பொறுப்பில் இருந்து வருகிறார்.

இதனையடுத்து, ஐ.ஜி. முருகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் எஸ்.பி. மனு அளித்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, உரிய விதிமுறைகள் பின்பற்றாத விசாக கமிட்டியை மாற்றியமைக்க வேண்டும் என்றும், ஐ.ஜி முருகனை பணியிடை மாற்றம் செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனு அளித்துள்ளார்.