மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, தமிழக அரசுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் 5 நிபந்தனைகளை விதித்துள்ளது..!

224

மதுரையை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, தமிழக அரசுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் 5 நிபந்தனைகளை விதித்துள்ளது.

தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில் 4 வழிச்சாலை அமைத்து, அந்தச் சாலையை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 மெகாவாட் மின் வசதியை 2 வழித்தடங்கள் மூலம் செய்ய வேண்டும், குறைந்த உயரத்தில் செல்லும் மின் இணைப்பு கம்பங்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள தோப்பூரில், போதிய குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், தோப்பூர் பகுதியில் 300 ஏக்கர் நிலத்தையும், மின் மாற்றிகளையும் கையகப்படுத்தி ஒப்படைக்க வேண்டும் என்று உத்தர விடப்பட்டுள்ளது.

எண்ணெய் குழாய் பதித்துள்ள இந்தியன் எண்ணெய் கழகத்திடம் எய்ம்ஸ் கட்டுமானம் குறித்து ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும், எய்ம்ஸ் வழியாக ஐஓசி. எண்ணெய்க் குழாய் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.