விவசாயி வெட்டி படுகொலை : மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

282

திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே விவசாயியை வெட்டி படுகொலை செய்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் உக்கிரன்கோட்டை கிராமத்தில் கோவில் கொடை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. அப்போது கோவிலில் இருந்த விவசாயி சண்முக சுந்தரத்தை, சில மர்மநபர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். தகவலறிந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், வெட்டி படுகொலை செய்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.