9-ம் வகுப்பு மாணவனை அடித்துக் கொன்ற நண்பர்கள்..!

898

திருவள்ளூரில் கிரிக்கெட் விளையாட்டின் போது ஏற்பட்ட மோதலில் 9ஆம் வகுப்பு மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர், மாரியப்பன் தெருவில் அன்சாரி கான் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் அப்துல்கலாம் காக்களூரில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், அப்துல்கலாம் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, ஏற்பட்ட மோதலில் அப்துல்கலாமை அவரது நண்பர்கள் சிலர் கடுமையாக தாக்கி உள்ளனர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள நண்பர்களை தேடி வருகின்றனர்.