வாலிபர் ஓட ஓட விரட்டிக் கொலை..!

335

மதுரை அருகே வாலிபர் ஒருவர் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை செல்லூர் பகுதியிலுள்ள கட்டபொம்மன் நகரைச் சேர்ந்தவர் பிரவீன் என்கிற பல்செட் பிரவீன். இவர் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நேற்று முன் தினம் செல்லூர் பகுதியில் நடைபெற்ற கோவில் விழாவின்போது இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒரு பிரிவினர் மீது பிரவீன் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இன்று வீட்டின் அருகே பிரவீன் நடந்து சென்றுகொண்டிருந்த போது அவரை ஓட ஓட விரட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடினர். தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தப்பியோடிய கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.