அமமுக நகர செயலாளர் வெட்டி படுகொலை..!

133

மதுராந்தகம் அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளர், 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்துள்ள அச்சிறுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளரான இவர், அப்பகுதியில் டீக்கடை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், இன்று அதிகாலை 5 மணிக்கு கடையை திறப்பதற்காக சென்ற பாலமுருகனை 6 பேர் சுற்றி வளைத்து வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடினர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். கொலையாளிகளை கண்டுபிடிக்கும் வரை கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக வணிகர்கள் அறிவித்துள்ளனர்.